Monday, April 6, 2020

தம்பதிகளின் இரண்டாம் தனிமை

  • தாய் தந்தையர் மற்றும் சகோதர சகோதரிகளுடன் வளர்ந்த காலம் வசந்த காலமாக இருந்தது. அப்போது நினைவில் நின்ற அனுபவங்கள் பசுமையாக உள்ளன.
  • திருமணத்தின்போது  புது உறவு வரவானது. மனைவியுடன் வாழ்ந்த காலம் எதிர்பார்ப்புகள் மற்றும் வளர்ச்சியின் வசந்தகாலமாக மலர்ந்தது.
  • குழந்தைகள் பிறந்த பிறகு அவர்களை வளர்த்தல் படிக்கவைத்தல், வேலைதேடுதல் திருமணம் செய்தல் தொடர்ந்த காலமாக இருந்தது. 
  • அதற்குப் பின்னர் அவர்கள் திருமணமாக தனக்கென்ற வாழ்க்கையை அமைத்துக் கொண்டபின்னர் தம்பதிகளின் தனிமை மீண்டும் துவங்கியது. 
  • இரண்டாம் தனிமையில் எதிர்பார்ப்புகள் உறவுகள் வித்தியாசமாக உள்ளன.

Friday, April 17, 2015

எங்கள் ஊர்.

 எங்கள் ஊர்.

நான் பிறந்து வளர்ந்த ஊர் கல்லிடைக் குறிச்சி.  திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம் ஊர் பக்கம் உள்ள சிறிய கிராமம், பதினெட்டு தெரு பிராமண அக்ரகாரங்கள்.  ஆதிவராகப் பெருமாள் கோவில். அதனைச் சுற்றி மாடத் தெருக்கள். முன்னால் சன்னதித்தெரு. இவைகளை சுற்றி ரதவீதிகள். அழகான கிராமம். 

கிராமத்திற்கு அழகு சேர்ப்பதே மலைத் தொடர்கள். எந்தத் தெருவிலிருந்து பார்த்தாலும் சுற்றி சுற்றி மலைத் தொடர்கள் காட்சியளிக்கும் ஊர்.  தாமிரவருணி நதி  அக்கிரகாரத்தைச் சுற்றி கன்னடியன்கால் வாய்க்கால் அவைகளைச் சுற்றி பச்சை பசேல் என வயல்வெளிகள். மிகவும் அழகான ஊர். 

கிராமத்து வீடுகளில் குளியல் அறைகளை என்பதே இல்லை. ஒவ்வோர் வீட்டிலும் பின்பக்கத்தில் வாய்க்கால் ஓடும்.  மக்கள் அனைவரும் ஆற்றின்கரை (நதிக்கரை)யில் குளிப்பார்கள். காலை நான்கு மணி முதலே மக்கள் ஆற்றின் கரைக்கு குளிப்பதற்கு நடந்து செல்லும் ஓசை கேட்கும். 

ஒவ்வொருவரும் வழக்கமான இடத்தில் முங்கிக் குளிப்பார்கள். கண்ணாடி போன்ற தண்ணீரில் முகம் பார்க்கலாம்.  குளிரில் முங்கி குளிப்பதே சுகம் தான்.

பள்ளிக்கூடம் மிகவும் அருகில் இருந்தது. பள்ளியில் பெல் அடித்தால் வீட்டிலிருந்து கிளம்பி ஓடி விடுவோம். மாலை வேளையில் பெல் அடித்து ஓயும் முன்னரே வீட்டுக்கு ஓடி வந்து ஸ்டைலாக பள்ளிப் பையை உள்ளே தூக்கி எறிந்து விட்டு விளையாட்டில் மூழ்கி விடும்.  தெருக்களில் வீட்டுக்கு வீடு குழந்தைகள் இருந்தார்கள். இப்போது நகரங்களில் குழந்தைகள் தங்கள் இனத்தை தேடமுடியாமல் தவிக்கும் நிலை வந்து விட்டது.

சூரியின் மறையும் நேரத்தில் வீட்டுக்குள் வந்து விடுவோம். 8 மணிக்குள் இரவு உணவு. 9 மணிக்குள் ஊரே அடங்கி விடும். மின்சாரம் ஓரிரு வீடுகளில் மட்டுமே இருந்தது. சிம்னி விளக்கில் படித்தோம்.  காலையில் எழுந்ததும் போட்டி போட்டுக் கொண்டு சப்தம் போட்டு படிப்போம்.

குழந்தைகள் டார்ச்சர், டென்சன், அப்செட் போன்ற வார்த்தைகள் தெரியாமல் இருந்தார்கள். மிதமான கல்வி,மிதமான உணவு, மிதமான விளையாட்டு, என்றிருந்ததால் சொந்த பந்தங்களில் உறவுகள் அக்கம் பக்கத்தரின் உறவுகள் குழந்தைகளுக்கு சுகமாய்த் தெரிந்தன.

குழந்தைப் பருவத்திலேயே பணத்தை நோக்கி பயணம் செல்லும் காலம் அன்று இல்லை. அதனால் கல்வியில் போட்டியில்லாமல் இருந்தது. குழந்தைப் பருவத்திலேயே தனிமை வயப் பட்டு சுயநலம்நோக்கி பயணம் செய்யும் காலம் அன்று இல்லை. அதனால் வாழ்க்கை மனிதாபிமானம் நிறைந்ததாக இருந்தது. 

ஆறு முழுவதும் மணல் கொட்டிக் கிடந்தது.  மணல் திருடர்கள் இல்லை. அதனால் தண்ணீர் சுத்தமாக இருந்து. யாரும் விலை கொடுத்து வாங்கவில்லை. மனிதர்கள் இயற்கைக்கு மிகுந்த மரியாதை அளித்தனர். 

Friday, May 30, 2014

அரசுப் பணியாளர்களின் நோக்கமும் செயல்பாடுகளும்

அரசுப் பணியாளர்களின் நோக்கமும் செயல்பாடுகளும் பற்றிய ஒரு ஆய்வினை துவக்க வேண்டும் போல இருக்கிறது.

அரசுப் பணியாளர் என்ற பெருமையை பெற உழைத்த கரங்கள் இன்று லஞ்சத்தை நோக்கி பயணிக்கின்றன என்பது ஒரு வெட்கக் கேடு,

நேர்மை என்ற உயரிய நோக்கம் பெரும்பாலான பணியாளர்களிடம் இல்லை என்பதை நன்கு உணர முடிகிறது.

முதலில் அரசு வேலைக்கு முந்துதல்... பின்னர் லஞ்சம் கிடைக்கும் பணிக்கு முந்துதல்...........பின்னர் லஞ்சத்திற்கு முந்துதல்...........பின்னர் இதில் முதலிடம் பிடிக்க முந்துதல்............இந்தப் போட்டியில் மட்டுமே பணியாளர்கள்  சென்று கொண்டு இருப்பது வேதனை.

Friday, January 17, 2014



அரசுப் பணியிலிருந்து ஓய்வு 

ஒரு நிறைவின் ஆரம்பம்


கிட்டத்தட்ட 40ஆண்டு கால அரசுப் பணியிலிருந்து நான் 30.06.2012 பிற்பகலில் பணிநிறைவு பெற்றேன். பள்ளிக் கல்வி  11ம் வகுப்பு, தட்டச்சு மற்றம் சுருக்கெழுத்து மட்டுமே கற்று எனது அரசுப் பணியினைத் துவங்கினேன். அரசுப் பணியில் நேர்மை, கீழ்ப் படிதல், முழு ஈடுபாடு, பொறுப்பு உணர்ந்து செயல்படுதல் ஆகியவற்றில் நான் தவறாது முழு மனதுடன் பணியாற்றி இருக்கிறேன் என்ற மனநிறைவு எனக்கு கிடைத்திருக்கிறது. பணியில் சேர்ந்தபோது எனக்கு அருளிய  வண்ணாரப் பேட்டை பேராத்துச் செல்வி என்றும் எனக்கு துணையாக இருந்து வழிகாட்டியிருக்கிறாள். குடும்பத்தின் வறுமை காரணமாக  தட்டச்சு சுருக்கெழுத்து கற்றுக் கொண்டிந்த நாட்களில் அந்தக் கோவிலில் மிகுந்த நம்பிக்கையுடன் வழிபடும்போதும் இக்கோவில் பக்கத்திலேயே எனக்கு அலுவலகம் அமைய வேண்டும் என்று வேண்டிக்கொள்வேன். என் வாழ்வில் மிகுந்த அதிசயமாக அந்த கோவில் பக்கத்திலேயே  உள்ள அலுவலகத்தில் எனக்கு அரசுப் பணி  துவங்கியது.
பின்னர், சென்னை, மதுரை, ராமநாதபுரம், கோவை என பற்பல இடங்களில் பணியாற்றிய காலம் முடிந்து அரசுப் பணியிலிருந்து ஓய்வு கிடைத்தது.

இப்பொழுது நான் தொடர்ந்து சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருக்கிறேன். வழக்கம்போல் காலை முதல் இரவு வரை நல்ல பணிகளில் என்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறேன். தெய்வீகச் சொற்பொழிவுகளை ஈடுபாட்டோடு கேட்பதிலும்,  அவ்வப்போது பின்னால் படிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் வாங்கி வைத்துள்ள பல நல்ல புத்தகங்களை படிப்பதிலும், நீண்ட காலமாக இருந்து வந்த எனது விருப்பமான சம்ஸ்கிருதம் மொழி கற்பதிலும், விரும்பிய வண்ணம் மனதிற்கு நிறைவு நல்கும் நல்ல நிகழ்ச்சிகளுக்கு சென்று வருவதிலும் என் மனம் நிறைவாக இருக்கிறது. எனவே நான் எனது வாழ்வில் ஒரு நிறைவளிக்கும் பாதையில் பயணம் செய்கிறேன்.

பயணத்தில் நான் அடைந்த அனுபவங்களை இந்த வலைப்பூவில் (பிளாக் ஸ்பாட்டில்) இனி கட்டுரைகளாக எழுதுகிறேன். 
பயணத்தைத் தொடர்கிறேன்............


Saturday, January 11, 2014

Ganapathiraman Income tax Calculator for 2013-2014 (Assessment Year 2014-2015)


This Income Tax Calculator for Tamilnadu Government Officers can be used to calculate their Income Tax for 2013-2014 and to prepare the proforma for Income Tax Deductions to be submitted to their respective Pay Drawing Officers. It can be downloaded from Google  as

'Ganapathiraman Income tax Calculator for Tamilnadu Govt.officers 2013-2014 (Indian Income Tax Assessment Year 2014-2015)'

It can be downloaded in Excell format from Scribed Account (Registration with your email address or face book login is necesary for download)
It can be available through individual request to my e mail also. New version for office 2003 users uploaded in scribed recently.

rganapathiraman@gmail.com
Ganapathiraman
ABOUT THE UTILITY:



HELP FILE


I am uploading the XL utility for the benefit of Tamilnadu Government Servants since 2003-2004 through the website www. scribed.com. as I found that several government servants are going in and out seeking help for income tax for several days during February every year.For the past two years the usage statistics and feedbacks of this utility all over Tamilnadu encourage me further after my retirement ie. 30th June 2012.  From the support, feedback  and suggestions, now I feel a help file is necessary to get maximum utility out of this Calculator. I give below the step by step help hints. More over you get all the help for filling up the input sheet by putting the cursor for few seconds in the respective cell. for example you put the cursor for a few seconds in rent column and see what has to be done.


1. Download the file in XL format only from the e.mail attchment or scribed account (registration required) or from my blog www.ganapathiraman.blogspot.com


2.In the first sheet (input) fill up the name, designation PAN No., Place and Date (dd/mm/yyyy) and save the file as save as ……….name of the individual …..or so. It can be used thousands of time in different names. 


3. Open the Automatic and Manual gross income sheet according to your choice. In the automatic gross income calculations you need to fill up the basic pay for every quarter and other details in the first line. Only blue coloured cells are open and they should be filled up properly. Get print out in legal sheet. If you choose manual filling up of gross income sheet you do it properly. It is your choice and need. Get print out. 


4. Come to the input sheet again and fill up the required fields by the amounts arrived at in Gross Income Sheet. Don’t leave blank cells without filling. You can get assured that no Red Coloured Cell is available in the Input Sheet. Put 0 (zero) in those blank cells. If necessary get printout of input sheet also in Legal sheet. ( it would be useful to check whether you entered correct figures)


5. Open the Return sheet and  get print in 2 Pages Legal Sheet continuously.


6. Now the return is ready . Put your signature. If necessary you can fill up the other savings details in the prescribed form.


7. Thank you one and all for your response and suggestions.  Please view my blogspot ‘ganapathiraman.blogspot.com. if you find leisure time.


With good wishes.

R.Ganapathiraman





Sunday, January 29, 2012

சுயநலத்தின் பரப்பு விரியட்டும்

நம் நாட்டின் நலமும் வளமும் நம்மிடம்  தான் உள்ளது.  மனிதர்களின் சுயநல வட்டம் வளராமல் குருகும்போது   லஞ்சம், மோசடி ஏமாற்று வேலைகள் பெருகுகின்றன.  சுயநலத்தின் பரப்பு விரியும்போது எந்த செயலிலும் நாட்டு பற்றும் பொது நலமும் அனைவருக்கும் உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணமும் தோன்றுகிறது  சுயநலம் வேண்டும்.அதன் பரப்பு எவ்வளவு விரிவாக உள்ளதோ அந்த அளவு நமது மனமும் மனநலமும் வளரும்.

Saturday, January 21, 2012

யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை

யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை 
யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை 
யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே  (திருமூலர்)

              இது திருமூலர் வாக்கியம்  அதாவது அனைவராலும் எளிதாக செய்யகூடிய சாமான்னிய தர்மம் எவை என தெரிவிக்கிறார்.  அது மட்டுமன்று.  இவற்றை மட்டுமே பின்பற்றி மனஅமைதி பெறலாம். இறைவனை வணங்குவதும் அனைத்து உயிர்களை நேசிப்பதும் உண்ணும் உணவை தர்ம சிந்தனையோடு பகிர்ந்து கொள்வதும் நமது கடமை.  பிறரை பார்க்கும் போதும் பேசும் போதும் இனிய சொற்களை பேசலாம். இனிய சொற்களை  பேசுவது  மனதை தூய்மையாக்கும் .
இத்தகைய சாமான்ய தர்மங்களை கடைபிடிப்போம்  மன சாந்தியுடன் வாழ்வோம் .