Sunday, January 29, 2012

சுயநலத்தின் பரப்பு விரியட்டும்

நம் நாட்டின் நலமும் வளமும் நம்மிடம்  தான் உள்ளது.  மனிதர்களின் சுயநல வட்டம் வளராமல் குருகும்போது   லஞ்சம், மோசடி ஏமாற்று வேலைகள் பெருகுகின்றன.  சுயநலத்தின் பரப்பு விரியும்போது எந்த செயலிலும் நாட்டு பற்றும் பொது நலமும் அனைவருக்கும் உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணமும் தோன்றுகிறது  சுயநலம் வேண்டும்.அதன் பரப்பு எவ்வளவு விரிவாக உள்ளதோ அந்த அளவு நமது மனமும் மனநலமும் வளரும்.

Saturday, January 21, 2012

யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை

யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை 
யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை 
யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே  (திருமூலர்)

              இது திருமூலர் வாக்கியம்  அதாவது அனைவராலும் எளிதாக செய்யகூடிய சாமான்னிய தர்மம் எவை என தெரிவிக்கிறார்.  அது மட்டுமன்று.  இவற்றை மட்டுமே பின்பற்றி மனஅமைதி பெறலாம். இறைவனை வணங்குவதும் அனைத்து உயிர்களை நேசிப்பதும் உண்ணும் உணவை தர்ம சிந்தனையோடு பகிர்ந்து கொள்வதும் நமது கடமை.  பிறரை பார்க்கும் போதும் பேசும் போதும் இனிய சொற்களை பேசலாம். இனிய சொற்களை  பேசுவது  மனதை தூய்மையாக்கும் .
இத்தகைய சாமான்ய தர்மங்களை கடைபிடிப்போம்  மன சாந்தியுடன் வாழ்வோம் .

Sunday, January 15, 2012

சாணக்கியன் சொல்.

Once you start a working on something,
don't be afraid of failure and don't abandon it.
People who work sincerely are the happiest.

வாழ்க வளமுடன்

பொதுவாக நாம் வாழ்த்தும்போது வாழ்க வளமுடன் என்று வாழ்த்துகிறோம். மன வளம் உடல் வளம் என்று பல வளங்கள் பெற வேண்டும் என நாம் வாழ்த்தும்போது நமது மனமும் உள்ளமும் வளமாகிறது. நம் மனத்தை
செம்மைபடுத்த பிறரை வாழ்த்துவது தான்  எளிதான வழி.

Saturday, January 14, 2012

பொங்கல் நாளில் ஒரு

எனக்கு இந்த பொங்கல் நாளில் ஒரு எண்ணம். சூரியனுக்கு ஒரு நன்றி விழா அல்லவா இது . அவன் ஒவ்வோர் நாளும் கண் சிமிட்டுவதால் தான் நாம் உறங்கி எழுகிறோம் . அவனன்றி உயிர்ப்பு இல்லை . அவனை நினைக்க துதிக்க ஒரு விழா இது.  அவனது உயிர்ப்பால் உயிர்பெறும் ஜீவ ராசிகள் அனைத்தும் நமது இதய கதவுகளை திறக்கின்றன. அனைத்து உயிர்களிடத்தும் நாம் செலுத்தும் அன்பு தான் அவனை துதிப்பது.